தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஜெ. எஸ் .டி மஹால் எதிர்ப்புறம் புதிதாக துவக்கப்பட்டுள்ள வைரம் யூத் ஸ்போர்ட்ஸ் வெல்ஃபேர் பெட் ரேஷன் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலை பயிற்சி மையம் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு ஜெ.எஸ்.டி மஹால் அதிபர் ஜெ .எஸ்.டி. அன்பழகன் தலைமை வகித்தார் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் திறப்பு விழாவிற்கு முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். புதிய நிறுவனத்தின் அதிபர் வி வைர ஹரிஷ் அனைவரையும் வரவேற்றார்.
கம்பம் நகர திமுக முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான துரை நெப்போலியன் ரத்னா எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் அதிபரும் கம்பம் தொழில் அதிபருமான எம் வேல் பாண்டியன் உள்பட நகர பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தார்கள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் வைரம் யூத் ஸ்போர்ட்ஸ் வெல்ஃபேர் பெட் ரேஷன் அதிபர் வி. வைர ஹரிஷ் கனிவுடன் உபசரித்தார்