மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஒவ் வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது. வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா (ஆக. 5) காலை கொடியேற் றத்துடன் துவங்கியது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று துவங்கிய திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.விழாவின் முதல் நாளான இன்று உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத் தில் எழுந்தருளுகிறார்.
இரவு அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார் விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை, இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.