போடிநாயக்கனூரில் மறைந்த மாமேதை அப்துல் கலாம் நினைவு தினத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் தன்னார்வல அமைப்பான நல்லோர் வட்டம் பொறுப்பாளர் குறிஞ்சி மணி தலைமையில் முந்தல் கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் போடிநாயக்கனூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் விரைவு ரயிலுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது