தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் டெக்சியணில் பயிற்சி பெற உள்ளனர்

பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பணியாளர் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டெக்சியன், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப ஆர்வமுள்ள திறமைகளை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்தானது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆற்றல் சார் மையம் மாணவர்களை மேம்படுத்துவதற்கும் மறுதிறன் வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியில் Dexian இன் பங்கு பாடத்திட்ட மேம்பாடு, வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பட்டதாரிகள் தொழில் நிறுவனங்களுக்கு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.

இதன்படி CUTN மற்றும் Dexian ஆகியவற்றின் கடுமையான தேர்வு செயல்முறையின் மூலம் கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருந்து 18 முதுகலை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாணவர்களுக்கு கல்வி கற்றல் மற்றும் நடைமுறை தொழில் அனுபவத்தை ஒருங்கிணைக்கும் உதவித்தொகையுடன் 18 மாத பயிற்சியை அளிக்கப்பட உள்ளது. வெற்றிகரமாக முடித்தவுடன், அவர்களுக்கு டெக்சியனில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இருப்பினும், பயிற்சிக்குப் பிறகு டெக்சியணில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஒப்பந்தம் இல்லை. எனவே இது மாணவர்கள் தங்களுடைய எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க உதவி செய்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் இன்று முதல் குழு மாணவர்களை சந்தித்தார். தேர்வெழுதிய மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அவர், சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *