போடிநாயக்கனூரில் பகுதிகளில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு பணிகளை ஆணையாளர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் கா ராஜலட்சுமி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்
தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரம் போடிநாயக்கனூர் இருந்து கேரளா பகுதியான கஜானா பாறை நெடுங்கண்டம் பூப்பாறை தேவிகுளம் சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறு ஆகிய கேரளப் பகுதிகளுக்கு தமிழக பகுதியான போடிநாயக்கனூரில் இருந்து தினமும் பொது போக்குவரத்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதன் எல்லை பகுதியான போடிநாயக்கனூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து சீதோஷண நிலை மாறுபட்டு நகர மக்களுக்கு காய்ச்சல் சளி போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது
இதனை தடுக்கும் விதமாக நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி உத்தரவின்படி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் களப்பணி உதவியாளர்கள் மூலம் அனைத்து வாடுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணிகளை ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் தேங்கும் பொருட்களை வெளியில் வைக்க கூடாது
நகராட்சி சாக்கடை கால்வாய் மேல் வாசற்படி கட்டக்கூடாது வீட்டிலிருந்து வெளியில் வரும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் மூலம் தேங்காமல் முறையாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் பொது மக்களை நேரில் சந்தித்து அறிவுறுத்தினார்
மேலும் கொசு அடிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்களை அனைத்து வாடுகளிலும் கொசு அடிக்கும் பணி தொய்வு இல்லாமல் நடக்க வேண்டும் என உத்தரவிட்டார்.