தஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு, விளார் சாலையில் பாதாள சாக்கடை குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும், அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கிணியால் தொடர்ந்து போராட்டம் செய்த பின்பு பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணி சில நாட்களாக நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணியில் தேவேந்திரன், நாராயண மூர்த்தி ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி முடித்து மாலை 6.15 மணியளவில் பாதாள சாக்கடை குழியிலிருந்து மேலே ஏறும் போது ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் புதையுண்டனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் இரண்டு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, பாதாள சாக்கடை குழாயை ஒட்டி மிகப் பெரிய பள்ளம் தோண்டிய போது தேவேந்திரன் உயிருடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மற்றொருவரான நாராயண மூர்த்தியை மீட்பது கடும் சவாலாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார், இறந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. பாதாள சாக்கடையில் உயிரிழந்த 27-வயதான நாராயண மூர்த்திக்கு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஒரு நடிகையை வைத்து திறக்கப்பட்ட "தனியார் மாலுக்கு" இரண்டு நாட்களாக அரசு தீ அணைப்பு மீட்பு வாகனம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பொது மக்களின் தேவைக்காக 30-அடி ஆழ பாதாள சாக்கடையில் இரங்கி உயிரை பனையம் வைத்து வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விஷவாயு தாக்குதல் சம்பவங்கள் ஏற்படும் என்ற கவனம் கொண்டு. மாநகராட்சி ஒப்பந்ததாரர், ஆபத்தான வேலைகள் செய்யும் போது ஒப்பந்த விதிகளின் படி, ஒப்பந்த வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உயிர் காப்பீடு "இன்சூரன்ஸ்" செய்திருக்கவேண்டும்.
மாநகராட்சியின் சாலை குப்பைசுத்தம் செய்வதற்காக பல லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட வண்டி பயனில்லாமல் ஓரமாக குப்பையாக நிற்கிறது. இதற்கு பதிலாக இப்படி ஆபத்தான வேலைகள் செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி அந்த வேலைகள் செய்யும் இடத்தில் விபத்துகள் ஏற்பட்டால் துரித மீட்பு பணி இயந்திரங்களை தஞ்சாவூர் மாநகராட்சியில் பயன்படுத்தியானால் இது போன்ற விபத்துகளோ, உயிரிழப்போ ஏற்படாமல் தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.