செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் அடுத்த சோழவரம் மாதரம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32 ) இவர் நேற்று முன்தினம் இரவு தனது வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் வழியில் காவாங்கரை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது நண்பரை சந்திக்க நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் பெட்ரோல் நிரப்புவதற்காக சண்முகபுரம் பாரதி நகரை சேர்ந்த பழனி (வயது 45 ) என்பவர் குடிபோதையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் பழனி , முருகனை கையால் தாக்கியதோடு பற்களால் கைகளில் பல இடங்களில் கடித்துள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவரை அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் முருகனை உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து அவரிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.