செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் மடம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் பா. சீனிவாசன், மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் அன்பரசு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ப. குப்பன் பங்கேற்று, தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும் ‘தாய்மொழியாம் தமிழ் மொழி’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாணவர்கள் பங்கேற்ற பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் சிவலிங்கம் நன்றி கூறினார்.