சி கே ராஜன்
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நினைவு 6- ஆண்டு நாள் அனுசரிக்கப்ப ட்டது. கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் அமைதி பேரணி மற்றும் உருவ படத்திற்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதற்கு மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா ஆகியோர் முன்னிலை
வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் பணிக் குழு செயலாளர் இள.புகழேந்தி, மாநகராட்சி மேயர் சுந்தரி
ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்.
இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகள் சீமாட்டி சிக்னலில் இருந்து பாரதி சாலை வழியாக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில்முருகன், சங்கீதா, கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், விஜயலட்சுமி செந்தில், ஆராமுது, சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா,சசிகலா ஜெயசீலன், மாவட்ட பிரதிநிதி பாத்திரக்கடை மாரியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.