தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அகில இந்திய வானொலியின் அறிவிப்பாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

                            பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கோடை பண்பலை நேயர் பேரவை தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

                        அகில இந்திய வானொலி கோடை பண்பலை அறிவிப்பாளர்கள் சிவக்குமார், கார்த்திக் குமார் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில், உங்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள். தினசரி காலையில் இருந்து மாலை வரை என்னென்ன செய்தோம் என்பதை நீங்கள் உங்களுக்குள் ஆராய்ச்சி செய்து கொண்டால் அடுத்த நாள் அந்த தவறுகள் நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

                              மரங்கள் மனிதர்களுக்கு நிறைய ஆக்சிஜனை தருகின்றது. அதுபோன்று நமது இதயம் துடிக்கும் போது  கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள் என்று துடிப்பதாக எண்ணிக்கொண்டு நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை அடுத்தவர்களுக்கு செய்து உதவி செய்யுங்கள்.

                             மரம் வளர்த்தால் நீங்கள் மிகப் பெரிய நன்மையை நாட்டுக்கு  செய்கிறீர்கள் என்று அர்த்தம். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக வருவதற்கு இளங்கலை பட்டம் படித்து நன்றாக குரல் வளமும், சமயோசித அறிவும் இருந்தால் மிக எளிதாக அறிவிப்பாளராக வரலாம். இவ்வாறு பேசினார்கள்.

                                    மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றார்கள். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *