தருமபுரி
ஜம்மணஹள்ளியில் ரூ.5.27 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட ஜம்மணஹள்ளி பஜனை கோயில் முதல் ஓம் சக்தி கோயில் வரை நீண்ட நாட்களாக சாலை வசதி இன்றி தவித்து வந்த கிராம மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக அரூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 5.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர் பசுபதி, அரூர் நகர செயளர் ARSS பாபு. ஜம்மணஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ்.சிவன்.ஒப்ந்ததாரர். கண்ணம்மாள் ராமசந்திரம், முருகன்.குமார். பண்ணீர். பேரூராட்சி கவுன்சிலர் பூபதி. உள்ளிட்ட அதிமு க கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்