அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை சார்பாக வணிக கூட்டமைப்பு சங்கத் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் எம். கமாலுதீன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.ஏ முகம்மது ஜியாவுதீன் வணிகவியல் சங்கத்தை துவக்கி வைத்து மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை எ. வி.சி கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.மயில்வாகனன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், வணிகம் அல்லது வர்த்தகம் மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு. இன்றைய நவீன உலகில் பொருளாதாரம் நாகரிகத்தின் முழு வரலாற்றிலும் மிக முக்கியமான வளர்ச்சியை அனுபவிக்க தகவல்தொடர்புக்கான கருவி மற்றும் தகவல்களின் ஆதாரமாக இணையம் உள்ளதுஇன்றைய உலகில் வர்த்தக வளர்ச்சிக்கு இணையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தின் கைகளில் உள்ளது பொருளாதாரம் வணிகத்தின் கைகளில் உள்ளது என்று வணிகவியலின் முக்கியத்துவம் பற்றியும் ,நம் நாட்டின் இன்றைய வளர்ச்சி பற்றியும் நாளைய முன்னேற்றம் பற்றியும் பேசினார்.
விழாவில் , தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளர் எம். என். முகமது ரபி ,கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் எம். நஜிமுதீன், முதல்வர் நா. அன்பரசி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை வணிகவியல் துறை மாணவிகள் செய்தனர்