திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ம், மலர் அஞ்சலி செலுத்தி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், நகர செயலாளர் பா. சிவனேசன், நகர அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், நகர பொருளாளர் புருஷோத்தமன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குதெரு ராஜேஷ், வி. சி. ராஜேந்திரன் மற்றும் வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் நிர்வாக கலந்து கொண்டனர்.