தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் கல்லூரித் திறந்த வெளி கலையரங்கில் “மீளுரு” குலிசைக் கடுங்கூத்து என்ற நாடகமானது இறைவழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சேசுராணி , கல்லூரிச் செயலர் அருட்சகோதரி முனைவர் R. சாந்தா மேரி ஜோஷிற்றா மற்றும் இல்லத்தலைமை அருட்சகோதரியும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் பாத்திமா மேரி சில்வியா முன்னிலை வகித்தனர்.
நாடகத்தின் தொடக்க நிகழ்வாக போரைக் குறித்தும் நாடகத்தின் மையக்கருத்தை ஆங்கிலத்தில் முனைவர் ஏஞ்சலின் சொர்ணர் தமிழில் முனைவர் தமிழ்ச்செல்வி எடுத்தியம்பினர். இயக்குனர் முருகபூபதி மணல்மகுடி நாடகநிலம் மற்றும் அருள் ஆனந்தர் தன்னாட்சிக் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய நாடகத்தின் கருப்பொருளாக போரால் ஏற்படும் விளைவுகளால் மனிதன் முதல் அனைத்து உயிரினங்கள் படும் துன்பங்களை தங்கள் நடிப்பின் வழியாக எடுத்துக்காட்டினர்.
மாணவிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இறுதியாக அருட்தந்தை அன்பரசு சே.ச. அருள் ஆனந்தர் தன்னாட்சிக் கல்லூர் முதல்வர் நன்றி நவில இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.