நமது தாய் திருநாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.
தேசியக் கொடியின் விலை ரூ.25 ஆகும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் வாங்கிக் கொள்ளலாம்
ஆன்லைன் மூலமாக தேசியக்கொடியை வாங்க விரும்பும் பொதுமக்கள் www.epostoffice.giv.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.