உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் இன்ஸ்டிட்யூட் ஆப் நர்சிங், கல்லூரி , சார்பாக மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
தாய்பாலின் முக்கியத்துவம் மற்றும் தாய்மார்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக,
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ந்தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய் பால் தினம் அனுசரிக்கபடுகிறது..
இந்நிலையில்,கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் இன்ஸ்டிட்யூட் ஆப் நர்சிங், கல்லூரி ,சார்பாக,
குழந்தைகளுக்கும். தாய்மாருக்கும், தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி நீலாம்பூர் பிரதான சாலையில் நடைபெற்றது..
ராயல் கேர் இன்ஸ்டிட்யூட் ஆப் நர்சிங் கல்லூரி நிர்வாகி டாக்டர். கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் டாக்டர். திலகவதி ராவ் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக,
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், குழந்தையின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துவதில் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாக இருப்பதாக கூறிய அவர், தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் இந்த மனித சங்கிலி பேரணி நடைபெறுவதாக தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக,டோலா சான்றளிக்கப்பட்ட தாய் பால் ஆலோசகர் நிரோஷா சுப்பிரமணியன்,கலந்து கொண்டு தாய்ப்பால் கொடுப்பதினால் தாயுக்கும் குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மணி செந்தில் குமார், திலகவதி ராய் மற்றும் நீலாம்பூர் ஊராட்சி தலைவர் சாவித்திரி சண்முக சுந்தரம்,உட்பட
நர்சிங் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்…