மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மாமதுரை விழாவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மதுரையிலிருந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி , நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை காவல் ஆணையர் லோகநாதன்., மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மதுரை யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அகமது, மாமதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.