பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிடத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து உமையாளபுரம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ,ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன் ,நாசர், வடக்கு மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் உண்மையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா பிரகதீஸ்வரன் , கலியமூர்த்தி , மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.