திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணா சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காலையில் அனைத்துபசன்னதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அம்மனுக்கு வளையல் மாலைஅணிவிக்கப்பட்டு தீபாராதனைநடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.