திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.

இவ்வாலயம் தமிழகத்தின் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இவ்வாலயத்தில் வருடம் தோறும் ஆடி மாதம் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு (08- ந் தேதி) முதல்,09- ந் தேதி வெள்ளிக்கிழமை, 10- ந் தேதி சனிக்கிழமை வரை காலை,மாலை இரண்டு வேலைகளிலும் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

லட்சார்ச்சனை செய்ய விரும்புவோர் முன்கூட்டியே ரூபாய் 100- யை சீட்டு விற்பனை செய்யும் இடத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறது.

தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி ஆடி கடை வெள்ளிக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்
ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *