நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040

கீழையூர் அருகே அடிப்படை வசதி செய்து தராத வெண்மணச்சேரி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலை சீராவட்டம் பாலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு;
நாகை மாவட்டம் கீழையூர் அருகே வெண்மணச்சேரி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நாகை திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை சீராவட்டம் பாலம் அருகே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை, பேருந்து வசதி 100 நாள் வேலைத்திட்டத்தில் முழு சம்பள வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் நாகை திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.