திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் வேடசந்தூர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேடசந்தூர் – கரூர் சாலையில் சந்தேகத்துக்கிடமான நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்டிபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்(26) என்பதும் கோயமுத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிவிரைவு இருசக்கர வாகனங்கள் திரு திருடியது தெரியவந்தது.
மேலும் வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வகுமாரிடமிருந்து 2 அதிவேக இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேற்கொண்ட பணியில் சிறப்பாக செயல்பட்ட வேடசந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து வேடசந்தூர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோரை வேடசந்தூர் டிஎஸ்பி.துர்காதேவி பாராட்டினார்