தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமை பண்ணைப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி இளங்கோவன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஜவஹர்லால் முகாமை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம்,சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் ஜமீல் பானு,ஆற்றுநர் அய்யனார், NMS சுருளிநாதன்,சுகாதார ஆய்வாளர் ரமேஷ், மருந்தாளுனர் ஜக்கப்பன்,துணைச் சேர்மன் சுருளி வேல்,கவுன்சிலர்கள் மயில்தாய், விஜிதா, மணீஸ்வரி, சுந்தரி உள்பட சுகாதார ஆய்வாளர்கள்,செவிலியர்கள்,மக்களை தேடி மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் மகப்பேறு நலம்,சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், கண்புரை நோய்,பால்வினை நோய்,எலும்பு நோய் ஆகிய நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சிறப்பு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறுநீர் மற்றும் சளி பரிசோதனை,கண் பரிசோதனை,ரத்தப் பரிசோதனை இ.சி.ஜி மற்றும் ஸ்கேன் இலவசமாகசெய்திருந்தனர். இந்த முகாமை சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.