தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா பாரதிதாசன் தஞ்சை மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து விளைய ராஜ் மந்திரி எஸ்.பி. சிங் பாகல் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது வழங்கினார்.
அப்போது தமிழ்நாடு ஊராட்சி பிரிவு மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனி யாண்டி, ஒருங்கிணைப்பாளர் ராஜன், கர்ணல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.