தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தொடர்பாக முகப்பு பகுதியில் கடைகளை அகற்றக் கூடாது என்று சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
அந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள முகப்பு கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுமார் 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர். கடைகளை இடிப்பதற்கு பகுதியுள்ள கடையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடைகள்,, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் , நகர் மன்ற உறுப்பினர் மணிமாலா ஆகியோர் தலைமையில் பகுதி பொதுமக்கள் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது.
இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், அப்போது நீதிமன்ற தடையான எதுவும் இல்லை என்பதால் அதிகாரிகளை முறைப்படி பணி செய்ய விடுங்கள் என்று நகர்மன்ற தலைவர் கருணாநிதி கூறினார். இதனால் கடைக்காரர்களுக்கும் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடைக்காரர் ஒருவர் நகர் மன்ற தலைவர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமின்றி தள்ளு முள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.