ராஜபாளையம் நகராட்சி T.P மில் சாலையில் இரண்டு பாலப்பணிகள் துவங்கி ஐந்து மாத காலமாகியும் இன்னும் நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, மேலும் பழைய பேருந்து நிலைய பணிகள் துவங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால் மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.
பாதாள சாக்கடைக்கு 500 சதுர அடிக்கு கீழ் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாதம் 100 ரூபாய் வசூலிப்பது என தீர்மானித்துள்ளனர். இது சாதாரண ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும். எனவே பாதாள சாக்கடைக்கு அநியாயமாக விதிக்கப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வேண்டியும், ஒப்பந்தம் விடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தெருக்களில் சாலை பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளது,
எனவே அந்தப் பணிகளை துவங்கிட வலியுறுத்தியும், நகரின் அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் சுத்தப்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகரச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். மூத்த தோழர் கணேசன் நகர் குழு உறுப்பினர் சுப்ரமணியன், மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.