மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க கோரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்:-
மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019-2020, 2020- 2021ல் மழை இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு தண்ணீர்
இல்லாததால் கரும்பு பதிவு குறைவாக இருந்ததால் அரவை நிறுத்தப்பட்டது.
2021-2022ல் போதுமான மழை பெய்தும் போதுமான கரும்பு இருந்தும் மாநில அரசு திறக்க நடவடிக்கை இல்லை. அதனால் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதுபோக மேலும் 46 நாட்கள் ஆலையின் முன்பு ஆலையை திறக்கக் கோரி தொடர் காத்திருக்கும் போராட்டமும் நடத்தினர்.
அரசு நியமித்த கமிட்டி சிபாரிசு செய்த ரூ.27 கோடியை உடனே ஒதுக்கி மராமத்து பார்த்து இந்த ஆண்டு 2024-2025ல் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் ஒதுக்க வேண்டும்,
என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாமணி, ஆகியோர் விளக்கி பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார்.
கரும்பு விவசாயிகள் தொழிலாளர்கள் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதை கண்ட எம். பி. சு.வெங்கடேசனும் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.