தேனி வைகை அரிமா புதிய சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாவட்ட தலைநகரான தேனி பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ள அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் 2024 2025 ஆண்டுக்கான வைகை அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்
இதன்படி அரிமா சங்கத் தலைவராக லயன் எஸ்.பி . சரவணராஜா செயலாளராக லயன் எம் வி கே ஆர் கண்ணன் ராஜா பொருளாளராக லயன் ஆர் ஸ்ரீதரன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி ஜி எஸ் ஆர் ஒரிஜினல் ஹெட் சௌந்திரன் இந்தியா எல் சி .ஐ . எப் லயன் டாக்டர் பாண்டியராஜன் சிறப்புரை ஆற்றினார் புதிய உறுப்பினர்களை அரிமா சங்கத்தில் இணைத்து மாவட்ட கவர்னர் லயன் டாக்டர் ஏ. சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
திண்டுக்கல் தேனி ஜிஎஸ்டி கோ ஆர்டிட்டர் லைன் கே. சுப்புராஜ் அரிமா சங்கத்தின் சேவை திட்டங்கள் குறித்து வாழ்த்துரை வழங்கினார் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆடிட்டர் லயன் சி ஏ ஆர் ஜெகதீஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் முன்னாள் பொருளாளர் டாக்டர் லயன் ஏ வேல்முருகன் திண்டுக்கல் தேனி டிசைன் மில்லியன் லயன் எம்.பெஸ்ட் ரவி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்லூரி மற்றும் பள்ளிகளின் நிர்வாக அதிபருமான கல்வி தந்தை டி ராஜமோகன் விஷ்வா பில்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் அதிபர் உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய அரிமா சங்க நிர்வாகிகள் பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள் விழாவில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஏழை எளிய மக்களுக்கு அரிசி ப்பை விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசு ஊக்கத்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேனி மாநகரின் கல்வித்தந்தை டி ராஜமோகன் நன்றி கூறினார்