சி கே ராஜன்
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூரில் தமிழக காவல்துறையில் சீருடை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது.
காவலர் பல்பொருள் அங்காடியில் தமிழக ஊர்க்காவல் படையினரும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதின்பேரில், மாவட்ட ஊர்க்காவல் படையினர்களுக்கு காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் வழங்கினார்.
475 மாவட்ட ஊர்க்காவல் படையினர்கள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் S.பிரபாகரன்,
R.அர்னால்டு ஈஸ்டர், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி , ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வம் மற்றும் ஊர்க்காவல் படை உதவி ஆய்வாளர் சிவகுமார்,
எழுத்தர் அனீஸ்தீன்
ஆகியோர் உடன் இருந்தனர்.