தென்காசி தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அனைத்து
விடுதி துப்பரவு பணியாளர்கள் மற்றும் பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை துப்புரவு பணியாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில்
தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அனைத்து விடுதியில் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தங்க பாண்டியன் தலைமையில்
பொருளாளர் சுமதி முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்
அந்த கோரிக்கை மனுவில்
நாங்கள் அனைவரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 06/06/2012 ஆண்டு முதல் ஆதி திராவிடர் நல பள்ளி, விடுதி, கல்லூரியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், கொத்தடிமைகளை ஒழிக்க வேண்டிய இந்த துறையிலேயே சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த நபர்களை துப்புரவு பணியாளர்கள் என்ற பெயரில் உந்த 12 ஆண்டு காலங்களு
க்கு மேலாக கொத்தடிமைகளாக இந்த நிர்வாகம் நடத்தி வருகிறது.
மிக குறைந்த ஊதியத்தில் மற்ற துறைகளில் வழங்கப்படும் ஊதியம் வழங்க வேண்டும்.
சம வேலை சம ஊதியம் துப்புரவு பணியாளர்களின் 12 ஆண்டு கால கோரிக்கை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணி மூப்பு உள்ளவர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் பள்ளி கல்வி துறைகளில் வழங்கப்படும் ஊதியம் வழங்கவும் காலமுறை ஊதியம் ரூபாய் 15700 வழங்கவும் எங்கள் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு மற்றும் இதர படிகள் வழங்க வேண்டு மென மனுவில் குறிப்பிட பட்டிருந்தது இதில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்