தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வட்டம் சங்கரன் கோவில் தாலுகா குருக்கள் பட்டி அருகே கீழ நீலிதநல்லூரைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவருடைய மகன் சரவணசெல்வன் (வயது 27). இவர் கடந்த 2019 ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஜெத்தா நகரில் உள்ள தனியார் . இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது அந்த நிறுவனத்தின் பழைய குப்பைகள், மின்கழிவுகளை அகற்றி வெளியில் விற்றதாக கூறி சரவணசெல்வன் உள்ளிட்ட 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு
மெக்கா சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த குற்றமும் செய்யாமல் இரண்டரை ஆண்டுகாலமாக சிறையில் வாடும் சரவண செல்வனை மீட்கவேண்டும் என்று குடும்பத்தினர் தென்காசி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *