தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் அறிவித்தார்.
அவரது செய்தி குறிப்பில்;-
தமிழக அரசு அரசாணை (நிலை) எண்.245 ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, சுதந்திர தினமான 15.08.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில், இணையவழியில் வரி செலுத்தும் சேவை. இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TNPASS), தமிழ்நாடு உயிர் பல்வகைமை வாரியம் உயிர் பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.