தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட உட்கடை கிராமமான மஞ்சளாறு கிராமத்தில் நாளை புதன்கிழமை 14 8 2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது
இந்த முகாமில் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை புதிய ரேஷன் கார்டு ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம் விவசாயத்துறை போக்குவரத்து துறை மற்றும் இதுர அனைத்து துறைகளும் 14 8 2024 புதன்கிழமை நாளை நேரில் மனுவினை கொடுத்து பயன்பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.