திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு தாலுகா வட்டாட்சியர்.வில்சன் தேவதாஸ் மற்றும் ரெட்டியார் சத்திரம் தாலுகா அலுவலக வருவாய் துறை அலுவலர்.பூங்கோதை தலைமையிலான போதை பொருள் பழக்கத்திற்கான உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செட்டிநாயக்கன் பட்டி கிராம அலுவலர்.பாலமுருகன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி.ஆரோக்கிய தாஸ் சேசு சபை மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கான போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பாதிப்புகள் பற்றி விரிவரையுடன் உறுதி மொழி நிகழ்ச்சியில் நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்க அவருக்கு அறிவுரை வழங்குவேன்.போதை பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி ,நுகர்வு, பன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி அளிக்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.