செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் நூற்றாண்டு கொண்டாடிய பள்ளியை மீட்டு தர கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் TELC நூற்றாண்டை கொண்டாடிய விடிவெள்ளி பள்ளியை போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்தவர்களுக்கு சட்டப்படி குற்றம் என தெரிந்தும் துணை போன பத்திர பதிவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்பகோணம் கோர்ட் ரவுண்டானாவில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கையில் பதாகைகளுடன் கண்டனம் முழக்கமிட்டனர்.
இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.