திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனரும் கலை மாமணி டாக்டர் ஜாக்குவார் தங்கத்தை
கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய கோரி தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைவர்க்கும் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அனுப்பி உள்ள கடிதத்தில் சென்னையில்
சங்கர் என்பவரும் அவருடன் சேர்ந்த சில நபர்கள் தொடர்ந்து அவரையும் அவர் பிறந்த இனமான நாடார் சமுதாயத்தை பற்றியும் மிக மிக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும்
இது சம்பந்தமாக சென்னையில் உள்ள எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்திலும்
ஆர் 5 விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு எனக்கு துனை நிற்க்க வேண்டும் என்று எங்களிடத்திலே கேட்டு இருக்கிறார்கள்
இதன் அடிப்படையில் தமிழக முதல்வராகிய தங்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் க்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பி உள்ளோம்
சுமார் 72 வயதான ஜாக்குவார் தங்கம் அவர்கள் 4500 படங்களுக்கு மேல் அனைத்து மொழிகளிலும் டூப் நடிகராக சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளார் திரைப்படத்துறையில் 2500 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் பல முன்னணி நடிகர்களான விஜயகாந்த் விஜய் சரத்குமார் பிரசாந்த் அருண் விஜய் சரவணன் விஜயசாந்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் தமிழ் அல்லாத பிற மொழி படங்களில் நடித்த முன்னணி நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி அளித்தவர் தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றவர் 6 படத்திற்கு தங்கப்பதக்கம் பெற்றவர் திரைப்பட துறையில் 17 ஆயிரம் விருதுகள் பெற்றவர் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடார் சமுதாய மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்றவர்
2014 ஆம் ஆண்டு கில்டு சங்கத்தின் செயலாளராகவும் 2018 ஆம் ஆண்டு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு வரை தலைவராக இருப்பவர்
இவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சில நபர்கள் இவருடைய அலுவலகத்தை சூறையாடி இவர் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறை இதில் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று மிகவும் வருத்தம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் பகிரங்கமாக ஜாக்குவார் தங்கத்தை அடிக்க வேண்டும் என்றும் கண்ட இடங்களில் அவரை அடிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சங்கர் என்பவர் பேசியிருக்கின்றார்
இந்த செய்தி பாலிமர் தொலைக் காட்சியில் வெளியாகி உள்ளது கலைமாமணி ஜாக்குவார் தங்கம் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எதிராளிகளை கைதுசெய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நாடார் சமுதாய மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தி உள்ளது
ஆகவே இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு கலைமாமணி ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கொடுத்த புகார் மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்றும்
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்