கம்பம் நேதாஜி அறக்கட்டையில் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி அறக்கட்டளை பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் ஒரு சிறந்த அமைப்பாகும் இங்கு பசி என்று வருபவருக்கு பசியை போக்கும் வகையில் காலை மாலை இரவு என மூன்று வேளையும் உணவுகள் வழங்கி சேவையாற்றி வருகிறார்
இந்த அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சோ. பஞ்சு ராஜா அந்த வகையில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா அப்பா இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்
இவர்களுக்கு கல்வி மருத்துவம் உணவு உடை போன்றவற்றை வழங்குவது மட்டும் இல்லாமல் பல்வேறு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறுவது வழக்கம் இதன்படி அறக்கட்டளை வளாகத்தில் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு நிறுவனத் தலைவர் பஞ்சு ராஜா தலைமை வகித்து அங்குள்ள குழந்தைகளுக்கு மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் இனிவரும் காலங்களில் மக்கள் தொகை பெருக்கம் ஊர் விரிவாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பூமி வெப்பம் ஆவதை தடுக்க ஒரே வழி வீட்டுக்கு வீடு பிள்ளைகளை வளர்ப்பது போல் மரங்களையும் வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாத்தால் மட்டுமே இனிவரும் தலைமுறைகள் சுகாதாரமாக வாழ முடியும் என்ற கருத்தை மாணவர்களுக்கு விளக்கினார் அறக்கட்டளை நிறுவனர் சோ பஞ்சராஜா இதுகுறித்து அங்கு உள்ள குழந்தைகளிடம் கேட்டபோது எங்களது இல்லத்தில் நாங்கள் ஆதரவற்றோர் என்ற எந்த ஒரு உணர்வு ஏற்பட்டுவிடாமல் எங்களுக்கு தந்தையாக உள்ள அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை வழி நடத்துகிறார் என்றனர்.