தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இடையே உள்ள பாரதிபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம், புகையிலை நமக்கு பகையிலை, புகை பிடிக்காதே உன் வாழ்வின் புன்னகை இழக்காதே என பல்வேறு போதைப் பொருளுக்கு எதிரான துண்டு பிரச்சாரங்களுடன் சாலையில் நின்று கொண்டு பொதுமக்களிடம் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்களை நிறுத்தி அவர்களிடம் நீங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனக்கூறி நாங்கள் உங்களுடைய மகள்களைப் போல எங்கள் மீது நீங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள் என கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுக்கு பூச்செடிகளை வழங்கினர்.
இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செவிலியர் தலைவி ராஜேஸ்வரி, அரசு பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மதியழகன், உலகநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.