புதுச்சேரி புதிய பேருந்து நிலயமானது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக பேருந்து நிறுத்தமாக AFT திடலில் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2000-ஆயிரத்திற்கும் மேலான பேருந்துகள் இயக்கப்படுகின்ற சூழ்நிலையில், இதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

மேலும் நேரடி சமூக ஆய்வுகள் மேற்கொண்டபோது கிழ்கண்ட கோரிக்கைகளை பொது மக்களும், தொடர் பயன்பாட்டாளர்களும் வெளிப்படுத்தினர்:-

  1. பேருந்து ஓட்டுநர்கள் வைத்த முதல் கோரிக்கை, பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாய், மேடும், பள்ளமாக சமநிலை இல்லாமல் உள்ளது, இதனை உடனடியாக சரிசெய்யவேண்டும்.
  2. வழித்தட அறிவிப்பு பலகைகள் குறைந்த அளவு மற்றும் உயரத்தில் வைக்கப்படுத்ததால் முதியவர்கள் (பயணிகள்) மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
  3. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்கு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டு மட்டுமே செயல்பட்டிலுள்ளது, மேலும் குடிநீரின் தரம் வருத்தத்திற்குரிய நிலையிலுள்ளது.
  4. தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் அறை மிக மோசமான நிலையில் உள்ளது, மேலும் துருபித்த நாற்காலியும் மழைநீரும் தேங்கியுள்ளது.
  5. ஒருமணி நேரத்திற்கு 1000-நபர்களுக்கு மேல் கூடக்கூடிய பேரூந்துநிலையத்தில் 05-ஆண்கள் 10-மகளிர் கழிவறைகள் மட்டுமே உள்ளது. மேலும் கூடுதலாக சிறுநீர் கழிக்கும் இடத்தை அடையாளப்படுத்த தற்காலிகமாக பராமரிக்க வேண்டுகிறோம்.
  6. மழை, வெயில் காலங்களில் பயணிகள் அமர்வதற்கு இரண்டு தகர கொட்டாய் அமைக்கப்பட்டுள்ளது இது பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக பயணிகள் அமரும் இடங்களை அடையாளப்படுத்தி வசதி செய்ய வேண்டுகிறோம்.
  7. மேலும் பேரூந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் தகர கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ளது, PTDC உணவகம் மற்றும் தனியார் உணவகத்தில் வெயிலின் உக்கிரத்தால் பணிபுரியும் ஊழியர்களின் உடல்முழுவது உஷ்ணத்தால் கொப்பளங்கள், கட்டிகள் உருவாகி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
  8. ஒட்டுமொத்த மக்களின் மிகப்பெரிய வேண்டுகோளாக இருப்பது இது பேருந்து நிலையமா? அல்லது புழுதி கலப்பும் நிலையமா? என்ற அளவிற்கு இந்த புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியுமாய் மிக ஒரு மோசமான நிலையில் உள்ளது.
  9. சுகாதார பிரச்சனை, குடிதண்ணீர் பிரச்சனை, கழிப்பறை பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் இந்த புதிய தற்காலிக பேருந்து நிலையத்தில் தொடர்ந்துவருகின்றது. பருவநிலை வருகின்ற மழைக்காலத்திற்கு முன் மேலேகுறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து பொது மக்கள் சிரமமின்றி பொதுப்போக்குவரத்தை சிறப்பாக பயன்படுத்திட ஆவணம் செய்திட கேட்டுக்கொள்கின்றோம்.

பழைய பேருந்து நிலையம் எங்களுக்கு அறிந்தவரை இன்னும் ஆறு மாத காலமாவது ஆகும் திறப்பதற்கு அப்படி இருக்கும் நிலையில் சின்ன சின்ன அடிப்படை வேலைகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் வருகின்ற 2024, அக்டோபர் மாதத்திற்குள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கும் என நகராட்சி ஆணையர் நம்பிக்கை..! இதில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில சமூக ஊடக தலைவர் Sri Mahesh Reddy அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது உடன் வளர்ச்சி அடைந்த பாரதம் மாநில அமைப்பாளர் திரு Sakthivel Rowthiram அவர்கள் பாஜக முக்கிய பிரமுகர் திரு Selva Kumaran Skr தகவல் தொழில்நுட்ப மாநில செயற்குழு உறுப்பினர் திரு Charles.தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *