தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் பண்பொழி அருகில் உள்ள கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பண்பொழி பேரூராட்சி மன்றத்தலைவர்.
அ.ராஜராஜன் தலைமை தாங்கினார்.
முன்னாள் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் மங்கள விநாயகம் முன்னிலை வகித்தாா். சீதாராமன் முன்னாள் தலைமை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியின் தலைமையாசிரியர் ப. கருணாலய பாண்டியன் வரவேற்பு ரையாற்றினார். பள்ளி மாணவ மாணவியரின்கண் கவர் கலைநிகழ்ச்சிகள்நடைபெற்றன . இந்நிகழ்வில்ஜான்சி ராணி லட்சுமி பாய், காந்தியடிகள், வீரமங்கை வேலு நாச்சியார், காமராஜர், அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் போன்று மாறு வேடமிட்டு தத்ரூபமாக நடித்து காட்டினார்கள்.இந்த சிறப்பான நிகழ்ச்சி விழாவிற்கு வருகை தந்த அனைத்து பெற்றோர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பல தலைவர்கள் சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். விழாவில் நாட்டாமை கருப்பசாமி, தங்கதுரை, முன்னாள் சர்வேயர் சுப்பையா, முத்துப்பாண்டி, ராசு, மாரித்துரை, செந்தூர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களுக்குஇனிப்புகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவின் நிறைவில் பள்ளி உதவிஆசிரியர் க.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.