தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குற்றால சாரல் விழாவில் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்ற
வலு தூக்குதல், பளு தூக்குதல் (ம) ஆணழகன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
வலு தூக்குதல் போட்டி பிரிவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி (ம) தென்காசி ஆகிய மாவட்டத்தினைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
பளு தூக்குதல் போட்டி பிரிவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ) மற்றும் ( தென்காசி ஆகிய மாவட்டத்தினைச் சார்ந்த ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
ஆணழகன் போட்டி பிரிவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் (ம) தென்காசி ஆகிய மாவட்டத்தினை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து
கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, குற்றலாம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜ கணபதி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ந.ஆ.
ஜெயரத்தினராஜன், விளையாட்டு சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.