செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
வந்தவாசி,வந்தை டைம்ஸ் 21 ஆம் ஆண்டு துவக்க விழா வந்தவாசி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட தமிழ்ச் சங்க தலைவர் பா. இந்திரராஜன் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனிவாசன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எக்ஸ்னோரா கிளை செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக, புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து பங்கேற்று பேசினார்.
தாய்மொழியாம் தமிழ் மொழியை அனைவரும் போற்ற வேண்டும். மேலும் ஊடகங்கள் நடுநிலை தன்மையுடனும் , அர்ப்பணிப்பு உணர்வுடன், அனைத்து கருத்துக்களையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் வந்தவாசி பகுதியில் கல்வி மற்றும் சமூக செயல்களில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.
இதில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், தாழம்பள்ளம் தலைமை ஆசிரியர் க.வாசு, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், மேல்நெமிலி பள்ளி தலைமை ஆசிரியை இரா. தேன்மொழி, ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன், முதுகலை ஆசிரியை அ.பூவிழி, ஊராட்சி செயலாளர் டாக்டர் எம்.பி.வெங்கடேசன், இரயில்வே சு. தனசேகரன், வநதை பிரேம், நூலகர் ஜா.தமீம், பட்டதாரி ஆசிரியர்கள் இரா. அருள் ஜோதி, பெ. செல்வராஜ், லூயிஸ் மத்தியாஸ், ச.ஜோசப் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.
பூங்குயில் சிவக்குமார், கேப்டன் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் தொகுத்து வழங்கினார்.
சிகரம் பண்பாட்டு மையம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி வி. முத்து அவர்களுக்கு ‘தொல்காப்பியர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியில் வந்தை டைம்ஸ் ஆசிரியர் அ. ஷாகுல் அமீது ஏற்புரை நிகழ்த்தினார்.