தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகராட்சி பொறியாளர் அய்யனார் மேலாளர் ஜெயந்தி சுகாதார அலுவலர் அரசகுமார் வருவாய் ஆய்வாளர் காஜா மொய்தீன் நகராட்சி கணக்காளர் குமார் அக்கவுண்டன்ட் மெர்சி சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல் பால்பாண்டி மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான குரு குமரன் மற்றும் நகர் மன்ற 33 வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள் நகராட்சி மேலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்