தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாரதி , ராதா, குன்றக்குடி சின்னமருது பெரியமருது பாண்டியர் மகளிர் மேம்பாட்டு தையல் தொழிற்கூட்டுறவு சங்கத்தின் சீருடை சரிபார்ப்பவர் பிரியா மற்றும் சங்க உறுப்பினர் கமலா ஆகியோர் வழங்கினார்கள்.
சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டு செட் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர். பள்ளிகளுக்கே நேரடியாக சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.