அகில இந்திய வ.உ.சி. பேரவையின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு விராட்டிபத்து, அச்சம்பத்து, பரவை சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், முடுவார்பட்டி, குறவன்குளம், சோழவந்தான், வாடிப்பட்டி, கீரைத்துறை, வில்லாபுரம், திருப்பாச்சேத்தி, கே.புதூர்,நாகமலை புதுக்கோட்டை, பழங்காநத்தம், மற்றும் அனைத்து ஊர்களிலும் இருந்தும் நிர்வாகிகள் வந்திருந்துசிறப்பித்தனர்.
மேற்கண்ட நிர்வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் செப்டம்பர் 5 ம் நாள் தேசிய வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
சிதம்பரனார் என்று அழைக்கப்படுவதை தவிர்த்து வ.உசிதம்பரம் பிள்ளை என்று அவரின் முழுப் பெயரையும் அழைக்குமாறு அரசு ஆவணங்களில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வருகின்ற செப்டம்பர் 5 ம் நாள் வ.உ.சியின் பிறந்த நாள் விழாவை,மதுரையில் உள்ள சிம்மக்கல்சிலையில்அனைவரும்
சிறப்பாககொண்டாடுவது என்றுஒருமனதாக
தீர்மானிக்கப்பட்டது.
வேளாளர் இனமான கவுண்டர் முதலியார் பிள்ளைமார் செட்டியார் ஆகிய பிரிவுகளை ஒன்றாக்கி வேளாளர் பேரினம் என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜா சோமசுந்தரம் தென் மண்டல அமைப்பாளர் நாகேந்திரன் மாவட்ட அமைப்பாளர் ராக்கிங் சுந்தர் புறநகர் மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் இளைஞரணி அமைப்பாளர் தங்கமணிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.