அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனார் 93 ஆவது பிறந்தநாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாவட்டத் தலைவர் கச்சைகட்டி பாண்டி, தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வட்டாரத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி வட்டார தலைவர் பாலசரவணன், சமயநல்லூர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், மாவட்டத் துணைத் தலைவர்கள் சடையன், கராத்தேசிவா, எஸ்டி.பிரிவுமாவட்ட தலைவர் முத்து காமாட்சி, இளைஞரணி தலைவர் அரி பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர் தலைவர் பால்பாண்டி, நன்றி கூறினார்..