திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை இனாம் கிளியூர்மருந்தகம் மூலமாக அம்மை தடுப்பூசி போடப்பட்டது.இனாம் மருந்தகத்தின் உதவி மருத்துவர் வி. சங்கவி,மற்றும் பணியாளர்கள்,ஊராட்சி மன்ற தலைவர் ஆர். கலையரசி ரங்கராஜன்,துணைத் தலைவர் எம். விமலா
ராணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் எம். சிவசங்கரன்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைந்தனர்.
