சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களை சுத்தமாக பராமரிக்கவும் , குப்பைகளை அகற்றவும் ,தெருவில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றவும், மரங்களின் கிளைகளை மழைக்காலத்திற்கு முன்வெட்டி
சுத்தம் செய்யவும் மாநகராட்சி ஆணையாளர் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31 வது வார்டு பத்மாவதிநகர் பிரதான சாலையில் மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில், சுகாதார பணியாளர்கள் தெருவை சுத்தம் செய்தும் மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.