அரியலூர் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மாதா மாதம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை கூடுதலாக பணி அமர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தி ற்கு மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஏ.ரோஸி தலைமை வகித்தார்.மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர். தனலட்சுமி,நிர்வாகிகள் டி. வனஜா,ஏ.ராணி,எம்.சிந்தியா,
எஸ்.பானுமதி, ஏ.அம்பிகா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி அம்பிகா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கே.மாரியம்மாள், மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ் மலர்கொடி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ் பாக்கியம், சிஐடியூ மாவட்ட தலைவர் எல்ஐசி. கே. கிருஷ்ணன்,சிஐடியூ மாவட்ட செயலாளர் பி துரைசாமி, மாவட்ட துணை தலைவர் ஆர் சிற்றம் பலம்,உழைக்கும் பெண்கள் அமைப்பு சி ஆதிலட்சுமி, மாதர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் கேஜெயந்தி,கேமகாலட்சுமி,கல்யாணி,டிரஸ்ட்எம்.பூங்கொடிஉள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
