கோவையில் ரோட்டரி 3201 மாவட்டம் சார்பாக சைபர் சாம்பியன்ஸ் எனும் சைபர் க்ரைம் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ரோட்டரி 3201 மாவட்டம் சார்பாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைபர் சேம்பியன்ஸ் எனும் விழிப்புணர்வு நிகழ்வு தொட்டிபாளையம் பிரிவில் உள்ள டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினராக ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தற்போது இளம் தலைமுறை மாணவர்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்ட நிலையில்,அதில் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சில சமூக விரோதிகளால் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலான செயல்களும் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த சைபர் சேம்பியன்ஸ் எனும் விழிப்புணர்வு திட்டத்தை துவங்கி உள்ளதாக குறிப்பிட்டார்..
இதன் வாயிலாக ஐந்து மண்டலங்களில் பல்வேறு மாணவர்கள் பயன்பெறும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்தார்..
தொடர்ந்து நடைபெற்ற சைபர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,கௌரவ அழைப்பாளராக,
மத்திய காவல் ஆயுத படை முதன்மை ஆய்வாளர் விஜயகுமார்,ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன் ராமலதா மாரிமுத்து,ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடம் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது,உள்ளிட்ட பல்வேறு சைபர் குறித்த தகவல்கள் குறித்து கூறினர்..
நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில்,ரோட்டரி நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரபு சங்கர்,நவநீத கிருஷ்ணன்,ஜெயகாந்தன்,டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளியின் தாளாளர் நிரஞ்சனி தசரதன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..